எதிர்க்கட்சிகள் நோ-பால் போட்டால் நாங்கள் சதம் அடிப்போம்! பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி!

Published : Aug 10, 2023, 05:32 PM ISTUpdated : Aug 10, 2023, 06:18 PM IST
எதிர்க்கட்சிகள் நோ-பால் போட்டால் நாங்கள் சதம் அடிப்போம்! பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி!

சுருக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் வீசிய நோ-பால். அவர்கள் திரும்பத் திரும்ப நோ-பால் வீசுகிறார்கள். நாங்கள் சதம் அடிக்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடவுள் தங்களுக்கு அளித்துள்ள நல்வாய்ப்பு என்றும் மக்கள் தங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

"நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை காட்டுகின்றனர். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். இந்த நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை எதிர்க்கட்சிகளுக்கான சோதனை என்றே கருதுகிறேன். எங்களுக்கானது அல்ல. எதிர்க்கட்சிகள் மீதுதான் இந்திய மக்களுக்கு நம்பிக்கை இல்லை." என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், "எதிர்க்கட்சிகள் தேசத்தை விட அதிகாரத்தையேள மதிக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன. நம்பிக்கையில்லாப் தீர்மானம் எப்போதும் எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்தான்" என்ற பிரதமர் வரலாறு காணாத வெற்றியுடன் திரும்பவும் ஆட்சிக்கு வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் ரூ.2.41 ட்ரில்லியன் பென்ஷன் தொகை விடுவிப்பு: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

"மக்கள் ஆசியுடன், முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டு ஆட்சிக்கு வரும் என்று எதிர்க்கட்சி முடிவு செய்துவிட்டன" என்று பிரதமர் கூறினார்.

"கடவுள் மிகவும் அன்பானவர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது கடவுளின் ஆசீர்வாதம் என்று நான் நம்புகிறேன். 2018ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது நான் கூறியிருந்தேன், இது எங்களுக்கு நம்பிக்கைக்கான பரீட்சை அல்ல, மாறாக அவர்கள் நம்பிக்கை மீதான பரீட்சை என்று. அதன் விளைவாக அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தார்கள்..." என பிரதமர் குறிப்பிட்டார்.

ஏழைகளின் பசியைப் பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்படுவதில்லை, ஆனால் நீங்கள் அதிகாரப் பசியில் இருக்கிறீர்கள் எனவும் எதிர்க்கட்சிகளை பிரதமர் தொடர்ந்து சாடினார். "தங்கள் நடத்தை மூலம், ஒரு சில எதிர்க்கட்சிகள் தங்களுக்கு கட்சி தேசம் மேல் என்பதை நிரூபித்துள்ளன. ஏழைகளின் பசியைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை, ஆனால் உங்கள் மனதில் அதிகாரப் பசி உள்ளது என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

மகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? பினராயி விஜயன் ஊழல் வழக்கில் சிக்கப் போகிறார் என பாஜக எச்சரிக்கை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!