ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலே ரூ.25 கட்டணம்... 5ம் முறை ரூ.50; ஆன்லைன் பரிமாற்றத்துக்கும் ‘ஆப்பு’ - வாடிக்கையாளர்களை வறுக்கும் எஸ்.பி.ஐ. வங்கி

First Published May 11, 2017, 4:31 PM IST
Highlights
sbi announced tax for atm money


ஜூன் 1-ந்தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி  ஏ.டி.எம்.களில்ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

அதேசமயம், ரூபே கிளாசிக் கார்டு மூலம் பணம் எடுத்தால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

வரும் ஜூன் மாதம் முதல் சேவைக் கட்டணம்  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போதும்,ரூ 25 கட்டணமாக வசூலிக்கப்படும். மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 50 கட்டணம், சேவைக்கட்டணம் என ஒவ்வொரு  பரிமாற்றத்துக்கும் வசூலிக்கப்படும்.

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். தவிர்த்து பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.20 சேவைக்கட்டணம், எஸ்.பி.ஐ.வங்கியில் ரூ.10 சேவைக்கட்டணம்  வசூலிக்கப்படும்

வங்கிப்பிரதிநிதிகள் மூலம் ரூ.10 ஆயிரம்வரை (ரூ.100 நோட்டுகளாக) வங்கியில்டெபாசிட் செய்தால்,  பணத்தின் மதிப்பில் 0.25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த பட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 8  ரூபாய் வரை சேவை வரி வசூலிக்கப்படும்.

வங்கி பிரதிநிதிகள் மூலம் ரூ.2 ஆயிரம் வரை(ரூ.100 நோட்டுகளாக) பணம் எடுத்தால்,2.50 சதவீதம் கட்டணம், சேவைவரியாக ரூ.6 வசூலிக்கப்படும்.

ஆன்-லைன் பரிமாற்றம்

ஆன்-லைன் மூலம், அதாவது ஐ.எம்.பி.எஸ். பரிமாற்றம் ரூ. ஒரு லட்சம் வரை செய்தால் ரூ.5 சேவைக்கட்டணம், ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ரூ.15 கட்டணம், ரூ.2 லட்சம் வரை ரூ.5 லட்சம் வரை ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.

அழுக்குப் படிந்த, கிழிந்த ரூபாய் நோட்டுகளை 20 நோட்டுகளுக்கு மேல் அதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் வரை இருந்தால், சேவைக்கட்டணம் வசூலிக்கப்படாது. 20 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் ஒவ்வொரு நோட்டுக்கும் ரூ.2 சேவைக்கட்டணம், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.

உதாரணமாக ரூ.500 நோட்டுகள் 25 தாள்கள் இருந்து அதன் மதிப்பு ரூ.12,500 இருந்தால், ஒவ்வொரு நோட்டுக்கு ரூ.2 கட்டணம், ரூ.50 சேவைக்கட்டணம், மற்றும் 5 ஆயிரத்துக்கு மேல் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ரூ. 5 கட்டணம் என மொத்தம் ரூ.62.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல 10 காசோலைகள் கொண்ட புத்தகம் பெற ரூ. 30 கட்டணம், 25 காசோலைகள் கொண்ட புத்தகம் பெற ரூ.75 கட்டணம், மற்றும் சேவைக்கட்டணம், 50 காசோலைகள் கொண்ட புத்தகம் பெற ரூ.150 கட்டணம், மற்றும்சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.

click me!