கர்நாடக சட்டசபையில் இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கர் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து சட்டசபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டசபையில் இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கர் உருவப்படம் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து சட்டசபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று, சட்டசபையில் முதல்முறையாக இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கர் வைக்கப்பட்டிருந்தது. இதைஅறிந்த காங்கிரஸ், மதர்ச்சார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
undefined
வருகிறது ‘வந்தே மெட்ரோ ரயில்’: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி
சர்ச்சைக்குரிய வீர சவார்க்கர் உருவபடத்தை ஏன் சட்டசபையில் வைக்க வேண்டும், அதன் அவசியம் என்ன என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பினார். சவர்க்கர் உருவபப்படத்துக்குப் போட்டியாக, காங்கிரஸ் நிர்வாகிகள் நேருவின் உருவப்படத்தை வைத்து சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ டிகே ஷிவகுமார் கூறுகயைில் “ சட்டசபை அமைதியாக நடக்கவிடாமல் எங்களைத்தூண்டுகிறார்கள். ஊழல் தொடர்பான விவகாரத்தை இந்தக் கூட்டத்தொடரில் நாங்கள் எழுப்புவோம் என்று ஆளும் அரசுக்குத் தெரியும் என்பதால் கூட்டத்தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தவே எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் சவார்க்கர் உருவபடத்தை வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்
ஷாருக்கான், தீபிகா படுகோன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. பதான் பட சர்ச்சை - பாஜக எம்.பி ஆவேசம்
வீர சவார்க்கர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்கள் மத்தியில் அவரின் தியாகங்களைக் கொண்டு செல்லவும்,கர்நாடகபாஜக மாநிலம் தழுவிய அளவில் விழி்ப்புணர்வு பிரச்சாரத்தைசமீபத்தில் நடத்தியது. கர்நாடகத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் எல்லைப்பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள பெலகாவி நகரில் சவார்க்கர் படத்துக்கு பாஜக உறுப்பினர் மரியாதையும் செலுத்தினர்.
:ஊழல்,அழுக்குசாலை,மாசு! இந்தியாவில் யதார்த்தம் இதுதான்!இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேச்சு
பெலகாவி நகருக்கும், சவார்க்கருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 1950ம் ஆண்டில் சவார்க்கர் கைது செய்யப்பட்டு, பெலகாவியில் உள்ள ஹின்டாலகா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் லியாகத் அலிகான் டெல்லி வர இருந்தபோது அவருக்குஎதிர்ப்புத் தெரிவித்து சவார்க்கர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசின் கடைசி குளிர்காலக்கூட்டத் தொடர் இதுவாகும். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. 10 நாட்கள் நடக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஊழல் பிரச்சினை, கர்நாடக மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சினை கடுமையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது