தேசத்தின் 78வது சுதந்திரதினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச, ஒரு லட்சம் இளைஞர்கள் தேசப் பணிக்காக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அரசியல் குடும்ப பின்னணி அல்லாத இளைஞர்கள் வர வேண்டும் என பேசினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிக்கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் மோடி, தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த எண்ணிலடங்கா வீரர்களுக்கும் மரியாதை செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
கேளர, வயநாடு துயர் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டும், இயற்கை சீற்றத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கவலைகள் அதிகரித்து வருகின்றன. இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர்; தேசமும் இழப்புகளை சந்தித்துள்ளது. அவர்களுக்காக இன்று, எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவருக்கும், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கும் என்று தான் உறுதியளிக்கிறேன் என்றார்.
பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களால், உலகளவில் பலமாக இருக்கும் சில வங்கிகளில் இந்திய வங்கிகளும் இடம்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். "நமது வங்கித் துறையின் நிலை என்னவென்று கற்பனை செய்து பாருங்கள். வளர்ச்சியும் இல்லை, விரிவாக்கமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை (வங்கி அமைப்பில்) எங்கள் வங்கிகள் கடினமான காலங்களை கடந்து வருகின்றன. வங்கியை உருவாக்க பெரிய சீர்திருத்தங்களை எடுத்தோம். இன்று இந்த துறை வலுவாக உள்ளது, சீர்திருத்தங்கள் காரணமாக, உலகளவில் சில வலுவான வங்கிகளில் எங்கள் வங்கிகள் உள்ளன, ”என்று மோடி கூறினார்.
Independence Day 2024: பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையின் மெசேஜ் இதுதான்!!
அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும். விக்சித் பாரத் 2047 'ஸ்வஸ்த் பாரத்' ஆக இருக்க வேண்டும், இதற்காக நாங்கள் ராஷ்ட்ரிய போஷன் மிஷனைத் தொடங்கியுள்ளோம்" என்று பிரதமர் மோடி பேசினார். அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச, ஒரு லட்சம் இளைஞர்கள் தேசப் பணிக்காக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அரசியல் குடும்ப பின்னணி அல்லாத இளைஞர்கள் வர வேண்டும் என பேசினார்.
இதையும் படியுங்கள்- Independence Day: செங்கோட்டையின் प्राचीர் மீது இருந்து 11வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றினார்