மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள பண பரிமாற்றம் குறித்த பிரச்சனையில் 7 நிபந்தனைகளை கூறினார்.
திருமணம் செய்ய இருப்பவர்கள், மணப் பெண்ணின் பெற்றோர், அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். அதற்கு உரிய சான்றிதழ்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது வரை பண மாற்றம் செய்யும்போது, ரூ.4,500 வரை வழங்கப்பட்டது. ஆனால், நாளை முதல் ரூ.2000 என குறைக்கப்படுகிறது. மேலும், கையில் மை வைத்த பிறகு, அந்த நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியாது.
விவசாயிகள், தங்களது வங்கி கணக்கில் இருந்து வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.
விவசாயத்துக்கு தேவையான உரம், இடுபொருள் வாங்குவதற்கு, வேளாண் சந்தை கமிட்டியில் உறுப்பினராக உள்ளவர்கள், அங்கு பதிவு செய்து, ரூ.50 ஆயிரம் வரை வங்கியில் பணம் எடுக்கலாம்.
வணிகர்கள், வியாபாரத்துக்கு தேவையான பணத்துக்கு ஒரு வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை தங்களது வங்கி கணக்கில் எடுத்து கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் (குரூப்-சி பிரிவு), தங்களது நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் வரை முன்பணமாக பெற்று கொள்ளலாம்.