மோடியின் அறிவிப்பால் மாநிலம் வாரியாக போன உயிர்கள் பட்டியல் : பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி

Asianet News Tamil  
Published : Nov 17, 2016, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
 மோடியின் அறிவிப்பால் மாநிலம் வாரியாக போன உயிர்கள்  பட்டியல் : பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி

சுருக்கம்

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியான கடந்த 8 நாட்களில் இந்த அறிவிப்பால் நேரடியாகவோ அல்லது மறைமுகமோவா பாதிக்கப்பட்டு, 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

  1. பஞ்சாப் மாநிலம், தார்ன் தரன் நகரைச் சேர்ந்த சுக்தேவ் சிங், தனது மகளின் திருமணத்துக்கு 4 நாட்களுக்கு முன்பாக, மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பை டி.வி. கேட்கிறார். மறுநாள், கடையில் திருமணத்துக்கான பொருட்கள் வாங்கச் சென்றபோது ரூ.500, ரூ.1000 நோட்டையாரும் வாங்காததால், அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
  2. உத்தரப்பிரதேசம், புலந்தசாகர் நகரைச் சேர்ந்த பி.எஸ்.எப். வீரர், தனது தாய் சில்லறை பணம் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டார். 
  3. ஓடிசா மாநிலத்தில், 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆட்டோ டிரைவர், ரூ,1000,ரூ500 நோட்டை வாங்க மறுத்து ஆட்டோவை இயக்க மறுத்துவிட்டார். இதனால், சிகிச்சை கிடைக்காமல்அந்த குழந்தை இறந்தது.
  4. தெலங்கானா, செகந்திராபாத்தில் லட்சுமிநாராயணா(75வயது) என்பவர் வங்கியில் பணம்பெற வரிசையில் நின்று இருந்தபோது,தீடிரென விழுந்து இறந்தார்.
  5. மத்தியப்பிரதேசம், சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி,, ஹல்கே லோதி என்பவர் தான் வைத்திருந்த ரூ1000, ரூ.500 பணத்தில் பயிர்களுக்கு உரம், மருந்து வாங்கமுடியாத விரக்தியில் தற்கொலை.
  6. உத்தரப்பிரதேசம் , மீரட் நகரைச் சேர்ந்த அஜிஸ் அன்சாரி(வயது60) பணத்தை வங்கியில் மாற்றிவிட்டு வீடு திரும்பும்போது அடையாள தெரியாதநபர்களால் கொலை. 
  7. பீகார் மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த முதியவர் சுரேந்தர சர்மா, வெயில் தாங்காமல்,வரிசையில் நிற்கும்போது சாவு. 
  8. உத்தரப்பிரதேசம், ஜலாவுன் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ரகுநாத் வர்மா(வயது70). மகளின் திருமணச் செலவுக்காக பணத்தை வங்கியில் எடுக்கச் சென்று, வங்கியில் கூட்டத்தில்நின்று உயிரிழப்பு
  9. உத்தரப்பிரதேசம், புலந்த்சாகர் நகரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்தது. இந்த குழந்தையின் பெற்றோரிடம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டும் இருந்ததால், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்தனர். 
  10. தன்னிடம் உள்ள பணத்தை மாற்றமுடியாத விரக்தியில் டெல்லி வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான்(வயது24) தூக்குபோட்டு தற்கொலை. 
  11. குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்னிடம் பணம் இருந்தும் வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்க முடியாத வருத்தத்தில் தற்கொலை. 
  12. உத்தரப்பிரதேசம், சாம்லி பகுதியைச் சேர்ந்த 20வயது பெண் சப்னா, தனது சகோதரர் வங்கியில் இருந்து சில்லரை பணம் கொண்டு வராததால், மனமுடைந்து தற்கொலை.
  13. கர்நாடாக மாநிலம், சிக்பல்லாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் வங்கியில் மாற்றிக்கொண்டு சென்ற பணத்தை ஒரு சிலர் திருடிச்சென்றதால், மனமுடைந்து தற்கொலை.
  14. சட்டீஸ்கரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னிடம் இருக்கும் ரூ.3 ஆயிரம் பணத்தை மாற்றி, தமிழகத்தில்இருக்கும் தனது பிள்ளைகளுக்கு அனுப்ப எண்ணினார். அது முடியாமல் போனதால் மனம் வருந்து தற்கொலை.
  15.  குஜராத் மாநிலம், லிம்டி நகரில் 69 வயது முதியவர், வங்கியில்வரிசையில் நிற்கும் போது, நெஞ்சு வலி ஏற்பட்டு மரணம். 
  16. கான்பூரைச் சேர்ந்த ஒருபெண், வங்கியில் பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தபோது, திடீர் நெஞ்சுவலியால் இறந்தார்.
  17. உத்தரப்பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த ஒருவர் நிலத்தை விற்று முன்பனமாக, ரூ.70 லட்சம் வைத்திருந்தார். மோடியின் அறிவிப்பை கேட்டவுடன் அதிர்ச்சியில் நெஞ்சுவலியால் மரணமடைந்தார். 
  18. மும்பையில், மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த குழந்தையின் பெற்றோர்களிடம் போதுமான சில்லறை இல்லாததால்,சிகிச்சை மறுப்பு. இதனால், பச்சிளங்குழந்தை உயிரிழப்பு. 
  19. ஆந்திரமாநிலம், விசாகப்பட்டிணம் தனியார் மருத்துமனை ஒன்றில், செல்லாத ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொண்டு மருந்துகள் தர மறுத்ததால், 18 மாதகுழந்தை உயிரிழப்பு. 
  20. உத்தரப்பிரதேசம், மெயின்பூரியில் ஒரு வயது குழந்தைக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டது. மருத்தவமனையில் சேர்க்கப்பட்ட போது, குழந்தையின் பெற்றோர்களிடத்தில் செல்லாத ரூபாய் மட்டுமே இருந்ததால், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்ததால், குழந்தை இறந்தது.
  21. ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில், குழந்தையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த ஆம்புலன்சுக்கு 100 ரூபாயை தர குழந்தையின் தந்தையிடம் பணம் இல்லை. ரூ.1000, ரூ.500 மட்டுமே இருந்தது. இதனால், ஆம்புலன்சு குழந்தையை ஏற்க மறுத்ததால், குழந்தை இறப்பு.
  22. உத்தரப்பிரதேசம், குஷிநகரைச் சேர்ந்த 40வயதான சலவைத் தொழில் செய்யும் பெண், அரசின் ரூ.1000 நோட்டு செல்லாத அறிவிப்பைக் கேட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
  23. பிரதமர் மோடியின் அறிவிப்புகேட்டு, தெலங்கானா மாநிலம்,  மகுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தலைவி தான் சேர்த்து வைத்திருந்த ரூ.54 லட்சம் பணம் செல்லாமல் போகுமோ என்ற அச்சத்தில் தற்கொலை. 
  24. மேற்கு வங்காளம், ஹவுராவைச் சேர்ந்த ஒருவர், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்று வெறுங்கையுடன் வீடு  திரும்பிய மனைவியை ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தார்.
  25. பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45வயது நபர்,தனது மகள் திருமணத்தில் வரதட்சணையாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாப்பிள்ளை வீட்டார் வாங்க மறுவிட்டால் என்ன செய்வு என நினைத்து அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
  26. கேரளமாநிலம், தலசேரியைச் சேர்ந்த 45  வயது நபர், தன்னிடம் இருந்த ரூ.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றார். மாடியில் உள்ள வங்கிக்கு செல்ல வரிசையில் நின்று இருந்தபோது, 2-வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். 
  27. குஜராத் மாநிலம், தாராபூர் நகரைச் சேர்ந்த 47 வயது விவசாயி, தனது நிலத்தில் வேலைபார்த்தவர்களுக்கு கூலி கொடுக்க சில்லறை நோட்டுக்கள் மாற்ற வங்கியில் வரிசையில் நின்று இருந்தபோது இறந்தார்.
  28. மும்பையில் 72 வயது முதியவர், தன்னிடமுள்ள பழையரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்ய வந்தபோது நெஞ்சுவலியால் மரணமடைந்தார். 
  29. கேரள மாநிலம், ஆழப்புழாவில், வங்கியின் முன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று இருந்த 75 வயது முதியவர் வெயிலில் சுருண்டு விழுந்து மரணம். 
  30. கர்நாடாக மாநிலம், உடுப்பி நகரில் 96 வயது முதியவர், வங்கியில் வரிசையில் நின்று இருந்தபோது இறந்தார்.
  31. மத்தியப்பிரதேச மாநிலம், சாகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவர், வங்கியில் பணத்தை மாற்ற நின்றுஇ ருந்தபோது திடீரென உயிரிழந்தார்.
  32. மத்தியப்பிரதேசம் போபால் நகரில், ஸ்டேட் வங்கியின் காசாளர், பணிச்சுமையால், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மரணடைந்தார்.
  33. உத்தரப்பிரதேசம், பாசியாபாத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கேட்டதும், நெஞ்சுவலி வந்து இறந்தார்.

மாநிலம் வாரியாக இறந்தவர்கள் பட்டியலை தயாரித்துள்ள எதிர்க்கட்சிகள் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளன. இந்த பட்டியலோடுதான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு குழுவினர், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். 

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!