மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரபூர்வமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் அவரது உடல்நிலை இப்போது நன்றாக தேறி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதில், "சத்குரு கடந்த நான்கு வாரங்களாக, கடுமையான தலைவலியைப் பொருட்படுத்தாமல் மஹாசிவராத்திரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான பணிகளை இடைவிடாமல் செய்திருக்கிறார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மார்ச் 15 அன்று, MRI ஸ்கேன் எடுத்தபோது மூளையில் அதிக ரத்தப்போக்கு இருப்பது தெரிந்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு போனில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
இருப்பினும், சத்குரு வலிநிவாரணிகள் மற்றும் மயக்க மருந்துகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி பங்கேற்றார். எந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
17ஆம் தேதி காலை சத்குருவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவரது மூளையில் உயிருக்கு ஆபத்தான அளவுக்கு வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினமே அவசர அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சத்குருவின் உடல்நிலை இப்போது சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறது. மிகவும் நன்றாக குணமடைந்து வருகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கூறுகையில், “நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம், உங்களை நீங்களே குணப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அவரிடம் நகைச்சுவையாகக் கூறினோம்" என்கிறார்.
மேலும், "அவரது உடல்நிலையில் காணப்படும் முன்னேற்றம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. தற்போது அவர் மிகவும் நலமாக உள்ளார். அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக உள்ளன. அவர் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார்" எனவும் டாக்டர் வினித் தெரிவித்துள்ளார்.
ஈஷா சத்குருவுக்கு மூளையில் வீக்கம், ரத்தக்கசிவு... டெல்லி அப்பல்லோவில் அவசர அறுவைசிகிச்சை!