ஈஷா சத்குருவுக்கு மூளையில் வீக்கம், ரத்தக்கசிவு... டெல்லி அப்பல்லோவில் அவசர அறுவைசிகிச்சை!

By SG Balan  |  First Published Mar 20, 2024, 6:09 PM IST

தலைவலி காரணமாக சத்குரு டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.


பிரபல ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி அப்பல்லோவில் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். மார்ச் 17ஆம் தேதி மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஆனந்த் நரசிம்மன் ட்விட்டரில் சத்குருவின் உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். சத்குரு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

தலைவலி காரணமாக சத்குரு டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு போனில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

Neurologist Dr. Vinit Suri of gives an update about Sadhguru’s recent Brain Surgery. pic.twitter.com/07WzJ0gO0z

— Isha Foundation (@ishafoundation)

இதனால் தான் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என்று தெரியவந்தது. மார்ச் 17 அன்று, அவர் மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் மோசமான தலைவலியால் அவதிப்பட்டார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் இரத்தப்போக்குடன் ஒரு பகுதியில் வீக்கமும் இருப்பது தெரிந்தது.

இதனால், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தது.

Get well soon
Prayers 🕉️ Namah Shivaay 🙏🏼

Sadhguru health update
Namaskaram
Sadhguru has recently undergone a life-threatening medical situation.
He was suffering from severe headache which got extremely severe by 14th On advice of Dr Vinit Suri, Sadhguru…

— Anand Narasimhan🇮🇳 (@AnchorAnandN)

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சத்குரு வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் குணமடைந்து வருகிறார். என மருத்துவர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய உறுப்புகள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

காதலி ஏமாற்றி கழட்டிவிடப் பார்க்கிறாரா... இதை செஞ்சு பிரேக்அப் ஆகாம பாத்துங்கோங்க!

click me!