
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கி 30 நாட்களில் வருமானம் 107 கோடியை தாண்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 கோடி 19 லட்சம் ரூபாய் அதிமாகும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் கோயிலில் பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துவருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதற்கு ஏற்ப கோயிலில் வருமானமும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு கோயில் நடை திறந்து 30 நாட்கள் முடிந்தபோது கோயிலில் 107 கோடியே 25 லட்சத்து 77 ஆயிரத்து 927 ரூபாய் வருவாய் வந்துள்ளது. இந்த கால அளவில் கடந்த ஆண்டு 93 கோடியே 6லட்சத்து 65 ஆயிரத்து 675ரூபாய் வருவாய் வந்திருந்தது. இந்த ஆண்டு 14 கோடியே 19 லட்சம் ரூபாய் அதிக வருவாய் வந்துள்ளது.
இந்த ஆண்டு அரவணை பிரசாதம் விற்பனை மூலம் 47 கோடியே 60 லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளது. இது கடந்த ஆண்டு 35 கோடியே 57 லட்சம் ரூபாயாக இருந்தது. அப்பம் விற்பனையில் இந்த ஆண்டு 8 கோடியே 192 லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளது. இது கடந்த ஆண்டு 7 கோடியே 42 லட்சம் ரூபாயாக இருந்தது. அபிஷேகம் மூலம் இந்த ஆண்டு ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளது காணிக்கையாக இந்த ஆண்டு 35 கோடியே 13 லட்சம் ரூபாய் வந்திருந்தது. இது கடந்த ஆண்டு 34 கோடியே 15 லட்சமாக இருந்தது.