தேசிய கீதத்தை அவமதித்து கருத்து ; பேஸ்புக் பதிவர் கைது

Asianet News Tamil  
Published : Dec 19, 2016, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
தேசிய கீதத்தை அவமதித்து கருத்து ; பேஸ்புக் பதிவர் கைது

சுருக்கம்

தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக கேரள எழுத்தாளர் கமல் சி.சவரா கைது செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப் படுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக கேரள எழுத்தாளர் கமல் சி.சவரா கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லம் போலீசாரின் உத்தரவின் பேரில் கோழிக்கோடு பகுதியில் நடக்கவு போலீசாரால் எழுத்தாளர் கமல் கைது செய்யப்பட்டார்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருனகப்பள்ளி காவல் நிலையத்தில் அவர் மீது தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.கவின் இளைஞர் பிரிவான யுவா மோர்சா அமைப்பு சார்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள மாநிலத்தில் உலகப்பட விழாவில், திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!