
சபரிமலையில் கடந்த 5 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசல் குறித்து கேரள அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக சாடி வருகின்றன. கூட்டம் அதிகமாக இருப்பதால் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஏராளமான பக்தர்கள் பந்தளத்தில் இருந்து திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையில் வழி தவறிய குழந்தை கதறி அழும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நிலக்கல்லில் கூட்ட நெரிசலில் காணாமல் போன தனது தந்தையை குழந்தை தேடுவதை காட்சிகள் காட்டுகிறது. கூப்பிய கைகளுடன் காவல் துறையின் முன் அலறி துடித்த குழந்தை, கடைசியில் தந்தையைக் கண்டதும் கைகளை அசைத்தது.
இதற்கிடையில், சபரிமலை சீசனில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேவசம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், தலைமைச் செயலாளர் டாக்டர்.வி.வேணு, தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த், மாநில காவல்துறைத் தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹிப், ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபரிமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகவும், பந்தளம் வலிய கோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலுக்குச் சென்று விட்டு ஏராளமானோர் வீடுகளுக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலை ஏற முடியாமல் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் திரும்பிச் செல்கின்றனர். இப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பலர் பத்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பம்பையிலிருந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை KSRTC பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வனப் பாதையில் பல வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்கி நிற்கின்றன.
பிளாப்பள்ளி இலவுங்கல் பாதை உள்ளிட்ட வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதில்லை. நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும் வேளையில் இன்று 89,981 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..