
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவிற்கு பிறகு, நாடு முழுவதும் பெண் ஐயப்ப பக்தர்களின் புரட்சி வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்து விரோத போலி பெண் பக்தர்கள் சபரிமலை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தவாறே, பெண் பத்திரிகையாளர் லிபி என்பவர் சபரிமலைக்கு மாலை போட்டு, நெற்றியில் திருநீறு, சந்தனம் அணிந்து சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், பத்தினம்திட்டா பேருந்து நிலையம் அருகே, பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். நிலக்கல் மற்றும் பம்பை அருகே பெண் பக்தர்கள் கடும் அளவில் குவிந்திருந்தனர். சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்து, பெண்கள் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அந்த பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இன மக்கள், “சபரிமலை புனிதத்தை காப்பதற்கு எங்கள் உயிரையும் தருவோம்” என்று என்றே பக்தர்கள் கூறி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் மீதான உயிரினும் மேலான பக்தியை உணர்ந்த நாட்டின் பிரதான ஊடகங்கள், இந்த பக்தியை டி.ஆர்.பி-யாக மாற்ற முடிவெடுத்து விட்டனர் போல் தெரிகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பெண் பத்திரிக்கையாளர்களை நிலக்கலுக்கு வந்துள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பத்திரிகையாளர்களின் வாகனங்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வரவே, போலீசார் அங்கு தடியடியும் நடத்தினார். இதன் காரணமாக அப்பகுதியில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பக்தர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி சபரிமலை சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் திரும்பி சென்ற சம்பவமும் இன்று நடைபெற்றது.
ஐயப்ப பக்தர்களால் தாக்கப்பட்டது பெண் செய்தியாளர்கள் மட்டும் அல்ல. ஆண் செய்தியாளர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண் பத்திரிக்கையாளர்கள் சபரிமலைக்கு சென்றதாகவும் அதனால்தான் பிரச்சனை அதிகரித்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.