உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்...! அடித்து தூக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Published : Oct 18, 2018, 01:03 PM IST
உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்...! அடித்து தூக்கப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவிற்கு பிறகு, நாடு முழுவதும் பெண் ஐயப்ப பக்தர்களின் புரட்சி வெடித்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவிற்கு பிறகு, நாடு முழுவதும் பெண் ஐயப்ப பக்தர்களின் புரட்சி வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது.கேரள பெண்களின் சபரிமலை ஐயப்பன் மீதான உயிரினும் மேலான பக்தியை உணர்ந்த நாட்டின் பிரதான ஊடகங்கள், இந்த பக்தியை டி.ஆர்.பி-யாக மாற்ற முடிவெடுத்து விட்டனர் போல் தெரிகிறது. 

நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பெண் பத்திரிக்கையாளர்களை நிலக்கலுக்கு அனுப்பப்பட்டனர். இதனை தொடர்ந்து, பெண் பத்திரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் ஐயப்ப பக்தர்கள். இதனை அடுத்து, அங்கு சலசலப்பு ஏற்படவே ஐயப்ப பக்தர்கள் பெண் செய்தியாளர் வந்த வாகனங்களைத் தாக்கினர். இதையடுத்து, மக்களைக் கலைந்து செல்லும்படி கூறி போலீசார் லேசான தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை, ஐயப்ப பக்தர்களிடம் மேலும் கலவரத்தை ஏற்படுத்தியது. 

போலீசார் மீது அவர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றமான சூழலை அடுத்து சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவு வரும் 22 ஆம் தேதி வரை இருக்கும். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். செய்தி சேகரிக்க வந்த இளவயது பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், சபரிமலைக்கு வரும் பெண்களை, ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களிடம் போகாதீங்க என பக்தர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் சிலர் கோரிக்கை வைக்கின்றனர். 

கேரள அரசு, பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தாலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் "பெண்கள்" வரக்கூடாது என்பதில் ஐயப்ப பக்தர்கள் தீவிரமாக உள்ளனர். ஆன்மீக வழியில் போராடிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள், எங்கள் உயிரே போனாலும், ஐயப்பன் கோயிலுக்கு "பெண்களை" அனுப்ப மாட்டோம் என்றும் அவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் லக்கேஜ் கொண்டு போக 1.5 மடங்கு கூடுதல் கட்டணம்! ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
மெட்ரோ வேகமா? ஸ்கூட்டர் வேகமா? பெங்களூரு டிராபிக்கில் ஒரு ஜாலி பந்தயம்!