Sabarimala: சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஐயப்பன் கோவிலுக்கு வந்தது!

By Raghupati R  |  First Published Dec 26, 2022, 7:19 PM IST

சபரிமலையில் நாளை மண்டல பூஜையை முன்னிட்டு, ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வந்தடைந்தது.


கேரளா மாநிலம், சபரிமலையில் மாத பிறப்பு நாளில் 5 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்கு நடை திறந்தாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதத்தில் நடைபெறும் மண்டலபூஜை,மகரவிளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

Tap to resize

Latest Videos

இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.ட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை நாளை நடக்க உள்ளது.

இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23ம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.இன்று மாலை சன்னிதானத்தை அடைந்தது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலையை நோக்கி அதிகளவில் வந்த வண்ணம் இருப்பதால், போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

click me!