Rahul Gandhi: பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாகச் சேர்ந்து இந்தியாவைத் தாக்கலாம்:ராகுல் காந்தி எச்சரிக்கை

By Pothy RajFirst Published Dec 26, 2022, 10:45 AM IST
Highlights

பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விரைவாக அல்லது சிறிது காலத்துக்குப்பின்போ இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கணித்துள்ளார்.

பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விரைவாக அல்லது சிறிது காலத்துக்குப்பின்போ இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கணித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா வழியாக டெல்லிக்கு ராகுல்காந்தி வந்துள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் 108 நாட்களுக்கும் மேலாக நடந்துள்ளது. 

இது மோடி அரசா ? மக்களை திசை திருப்பவே இந்து-முஸ்லிம் விவகாரம் - ராகுல் காந்தி அதிரடி பேச்சு !!

டெல்லியில் தற்போது ஓய்வெடுத்து வரும் ஜனவரி 3ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் ராகுல் காந்தி யாத்திரை தொடங்கும். இதற்கிடையே டெல்லியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது, ஒரு யூடியூப் சேனலை அவர்களிடம் பகிர்ந்தார். 
அதைப் பார்த்து ராகுல் காந்தி கூறியதாவது

 “ இந்தியா பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது, இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும் இல்லாவிட்டால், இந்தியா மிகப்பெரிய பின்னடவைச் சந்திக்கலாம். 

கல்வான் மற்றும் டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் என்பது, சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவைத் தாக்குவதற்கான உத்தியின் சோதனைக்கட்டம். பாகிஸ்தானுடன் சீனா நெருக்கமான பொருளாதார உறவுகளை வைத்துள்ளது. 

ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் - டெல்லியில் மாஸ் காட்டிய கமல் ஹாசன்!

ஒருவேளை போர் என்று ஏற்பட்டால் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டு இந்தியா மீது ஒரே நாடாக தாக்குதல் நடத்தலாம். அப்போது இந்தியா மிகுந்த பின்னடைவைச் சந்திக்கக் கூடும். இப்போதே இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. 

நம்முடைய நாட்டில், சில தொந்தரவுகள், சண்டைகள், குழப்பங்கள், வெறுப்புகள் உள்ளன. நம்முடைய மனது இன்னும் குழப்பமான நிலையில் இருக்கிறது, நம்முடைய மனநிலை என்பது கூட்டுப்போர் அல்லது, இணைய மனநிலை அல்ல. நான் மீண்டும் சொல்கிறேன் இந்தியா பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனா இரு நாடுகளுமே தயாராகி வருகிறார்கள், இந்தியா அமைதியாக இருக்கிறது என அடிக்கடி நான் கூறிவருகிறேன்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா, பிரியங்கா காந்தி இணைந்தனர்

எல்லையில் என்ன நடக்கிறது, அங்கு நிலவும் சூழல் என்ன என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு தெளிவாகக் கூற வேண்டும்.  எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், அதை இப்போதே எடுங்கள். உண்மையாக, நாம் 5 ஆண்டுகளுக்கு முன்பே நமது நடவடிக்கையை தொடங்கி இருக்க வேண்டும், நாம் செய்யவில்லை. விரைவாக நாம் செயல்படாவிட்டால், நம் தேசம் பாதிக்கப்படக்கூடும்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
 

click me!