சீனாவில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்துக்கு திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்துக்கு திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபரையும்,அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் என 20 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா, பிரியங்கா காந்தி இணைந்தனர்
ஏற்கெனவே சீனாவில் இருந்து ஆக்ராவுக்கு திரும்பிய 40வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஆக்ராவில் உள்ள அவரின் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக லக்னோவில் உள்ள கொரோனோ மரபணு பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரு நபர்களையும் சந்தித்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் குறித்து கேட்டறிந்து அவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து ஆக்ராவுக்கு கடந்த 23ம் தேதி திரும்பிய நபருக்குத்தான் முதன் முதலில் கொரோனா உறுதியானது. இவர்தான் ஆக்ரா மாவட்டத்தின் முதல் கொரோனோ நோயாளியாகும். இப்போது உன்னவ் மாவட்டத்தில் உள்ள ஹசாங்கஜ் தாலுகாவில் கராவுரா கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள இருப்பைச் சரிபாருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
இந்த நபர் சீனாவில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது.
தலைமை மருத்து அதிகாரி ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ சீனா மற்றும் துபாயில் இருந்த வந்த இருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்குமே கொரோனா இருப்பது உறுதியானது. இருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இருவரோடும் பழகிய, பேசிய,நெருக்கமாக இருந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலைக் கடைபிடித்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். சானிடைசர் பயன்படுத்துதல், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுதலை அறிவுறுத்தியுள்ளோம். ” எனத் தெரிவித்தார்
பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாகச் சேர்ந்து இந்தியாவைத் தாக்கலாம்:ராகுல் காந்தி எச்சரிக்கை
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் பிளாண்ட்களை தயாராக வைத்திருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே தாஜ்மஹால், ஆக்ரா, அக்பர் கோட்டையைக் காணவரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதார அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள். இது தவிர ஆக்ரா விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையங்களிலும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன