பெண்கள் சபரிமலை வந்தால் மிளகாய்பொடி ஸ்பிரே ரெடி... உச்சநீதிமன்றம் முக்கிய முடிவு..!

By vinoth kumarFirst Published Dec 13, 2019, 1:11 PM IST
Highlights

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிந்து அம்மனி, ரெஹானா பாத்திமா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது. 

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லலை என்பது ஐதிகம். ஆனால்,  அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த ஆண்டு யாத்திரை காலத்தில் சபரிமலைக்கு செல்ல முயன்ற சில பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிலர் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இதனால், கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், 2018-ம் ஆண்டு அனைத்து பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்ற உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

இதனிடையே, சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும். வர விரும்பினால் உரிய அனுமதி பெற்று கடிதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துவிட்டது. இந்த ஆண்டில் யாத்திரை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சபரிமலைக்கு செல்ல முயன்ற திருப்தி தேசாய், ரெஹானா பாத்திமா ஆகிய பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அவருடன் வந்த பிந்து என்ற பெண் மீது மிளகாய் பொடி தூள் ஸ்பிரே அடித்து விரட்டி அடித்தனர்.  

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிந்து அம்மனி, ரெஹானா பாத்திமா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது. கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாத காரியமாகும். மேலும், சபரிமலையில் இறுதி தீர்ப்பு எதுவும் இல்லை, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மறுசீராய்வு மனு விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!