அயோத்தி வழக்கில் கடுப்பான நீதிபதி... 18 மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி..!

By vinoth kumarFirst Published Dec 12, 2019, 4:55 PM IST
Highlights

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை பெரும்பாலானோர்  ஏற்றுக்கொண்ட நிலையில் சில பிரிவினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில், அகில பாரத இந்து மகாசபா, ஜாமியத் உலமா இ-ஹிந்த் தலைவர் உள்ளிட்ட 9 மனுக்கள் இந்த வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை. மற்ற 9 மனுக்கள் புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

click me!