
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 90 ஆண்டு பாரம்பரிய காக்கி அரைகால் டிரவுசருக்கு பதில் பழுப்பு நிற முழு கால் சட்டை இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்து அமைப்பாக கடந்த 90 ஆண்டுகளாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவா சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆங்கிலேயர்கள் காலத்திலேயே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி, சீருடை மாற்றம் குறித்து தெரிவிக்கையில், எங்கள் சீருடையில் மாற்றம் செய்துள்ளோம் என்றும், காலத்துக்கேற்ப இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார். காக்கி அரைக்கால் டிரவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழு டிரவுசர், வெள்ளை நிற சட்டையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது முற்றிலும் பழுப்புற நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையும், காவி நிற ஸ்வட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1925 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சீருடையாக காக்கி நிற சட்டையும், அரைக்கால் டிரவுசரும் இருந்தது. இது பின்னர் 1939 ஆம் ஆண்டில் வெள்ளை நிற சட்டை மற்றும் காக்கி அரைக்கால டிரவுசராக மாற்றம் அடைந்தது. அதேபோல், 1974, 2010-களில் சீருடையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பிறகு தற்போது 2016 ஆம் ஆண்டு காக்கி நிற அரைக்கால் டிரவுசரில் இருந்து பழுப்பு நிற முழுகால் டிரவுசராக மாற்றப்பட்டுள்ளது.