தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய வெடிகுண்டுகளில் பாகிஸ்தான் சின்னம் – ராணுவ அதிகாரிகள் கண்டுபிடிப்பு

 
Published : Oct 11, 2016, 05:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய வெடிகுண்டுகளில் பாகிஸ்தான் சின்னம் – ராணுவ அதிகாரிகள் கண்டுபிடிப்பு

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டுகளில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், நவ்காம் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். இந்திய ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளின் இந்த ஊடுருவல்களை முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி இந்திய எல்லைக்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் மூலம் இந்த ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அப்போது, தீவிரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், அதிக அளவில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள், 6 பாட்டில்களில் பெட்ரோலிய ஜெல்லி, 6 பாட்டில்களில் எரியக்கூடிய திரவம், 6 லைட்டர்கள் மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இதுகுறித்து, ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பொருட்களை சோதனை செய்ததில் அதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கையெறி குண்டுகள் மற்றும் யூபிஐஎல் வகை குண்டுகளில் பாகிஸ்தான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முத்திரை காணப்படுகிறது. மருந்து மற்றும் உணவு பொருட்களிலும் பாகிஸ்தான் தொழிற்சாலை பெயர்களே உள்ளன.

செப்டம்பர் 11ம் தேதி பூஞ்ச் செக்டாரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதல், 18ம் தேதி உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களிலும் இதுபோன்ற குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்வது வெட்டவெளிச்சமாகி உள்ளது” என்றார். 

கடந்த 5 மற்றும் 6ம் தேதி ஜம்மு காஷ்மீரின் நவ்காம் மற்றும் ராம்பூர் பகுதிகளில் தீவிரவாதிகள் 3 முறை ஊடுருவ முயன்றனர். இதனை ராணுவ வீரர்கள் முறியடித்தனர். நவ்காம் செக்டாரில் ஊடுருவலை தடுப்பதற்காக நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் இதுவாகும். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
திருப்பதி: திருமலை போகிறீர்களா? தரிசனத்தில் திடீர் மாற்றம்! பக்தர்கள் கவனத்திற்கு!