
தேனிலவின்போது, திருமண பந்தத்துக்கு ஒத்துழைக்க மறுத்த மனைவியை விவாகரத்து செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சுதன் - ரேகா ஆகியோருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண முடிந்தவுடன், தேனிலவுக்காக சிம்லா சென்ற இவர்கள், சந்தோஷமாக தேனிலவைக் கழிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருமண பந்தத்துக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை எனவும், கணவன் சுதனை திட்டியும் உள்ளார் ரேகா. தேனிலவு அனுபவும் மிகுந்த கசப்புக்குள்ளானது சுதனுக்கு. இதனை அடுத்து 3 மாத காலத்திற்குப் பிறகு, கணவனை விட்டு பிரிந்தார் ரேகா.
இதனையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் சுதன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேனிலவில் திருமண பந்தத்தை நிறைவேற்றும் நிலையில் கணவர் இருந்துள்ளார். ஆனால், அதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
கணவனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.இதுபோன்ற ஒரு பெண்ணின் நடத்தை சித்தரவதைதான். அதையெல்லாம் கணவன் தாங்கிக் கொள்வது சாத்தியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீது ரேகா சுமத்தியுள்ள வாய்மொழி குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இவர்கள் இருவரின் பிரச்சனை தேனிலவில் இருந்தே ஆரம்பித்துள்ளது. அந்த கசப்பான அனுபவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்துள்ளன. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம் என நீதிமன்றம் தெரிவித்து.