ஆர்எஸ்எஸ் குறித்து ரத்தன் டாடா கேட்ட சர்ச்சை கேள்வி.. அமைச்சர் சொன்ன பரபரப்பு விளக்கம்..

By Thanalakshmi VFirst Published Apr 15, 2022, 10:43 AM IST
Highlights

மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 

மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மகாரஷ்டிர மாநிலம் புணேவில் அறகட்டளை சார்பில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக்கொண்டர். மேலும் அவர் நிகழ்ச்சியில் உரையாற்றிய, முன்பு பாஜக- சிவசேனா கூட்டணியில் மாநில அமைச்சராக இருந்த போது நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

அவர் கூறியதாவது, மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்த போது, ஆர் எஸ் எஸ் நிறுவனரும் மருத்துவருமான கே.பி.ஹெட்கேவார்  பெயரில் ஒளரங்கபாத்தில் மருத்துவனை திறந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனையை தொழிலதிபரும் டாடா குழுமத்தில் தலைவருமான ரத்தன் டாடா திறந்து வைக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் முத்த நிர்வாகி என்னை தொடர்புக்கொண்டு உதவிக் கேட்டாதாக அமைச்சர் கட்கரி கூறினார்.

பின்னர் டாடாவைத் தொடர்பு கொண்டு, நாட்டில் உள்ள ஏழைகளுக்கு புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் டாடா புற்றுநோய் மருத்துவமனையின் பங்களிப்பை மேற்கோள் காட்டி மருத்துவமனையைத் திறக்கும்படி கேட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். அப்போது,ஆர் எஸ் எஸ் மூலம் திறக்கப்படும் அந்த மருத்துவமனையில் ஹிந்துகளுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கப்படுமா..? என்று அவர் என்னிடம் கேட்டதாக அமைச்சர் கட்கரி கூறினார்.

மேலும் டாடாவிடம் ”ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள்” என்று நான் கேட்டேன் . அதற்கு அவர் ”அந்த மருத்துவமனை ஆர் எஸ் எஸ் அமைப்புடையதாயிற்றே” என்று கூறினார். அதற்கு நான், அந்த மருத்துவமனை அனைத்து மதத்தினருக்குமானது. மேலும் மத அடிப்படையில், ஆர் எஸ் எஸ் அமைப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று தொழிலதிபர் டாடாவிற்கு நான் விளக்கியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.பின்னர் பல விஷயங்களை டாடாவிடம் விளக்கியதாகவும் அவர் "மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கட்கரி தெரிவித்தார்.

click me!