டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று..?தேர்வு மையத்தை மாற்ற திட்டம்...

Published : Apr 15, 2022, 09:37 AM ISTUpdated : Apr 15, 2022, 09:40 AM IST
டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று..?தேர்வு மையத்தை மாற்ற திட்டம்...

சுருக்கம்

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கடந்த இரண்டு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டு பெரும்பாலான குடும்பத்தையே பாதிப்புக்குள்ளாக்கியது. இந்தநிலையில் தற்போது தான் கொரோனாவால் உயிரிழப்பு குறைந்து மக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழக்கையை தொடங்கியுள்ளனர். இதனை சீரழிக்கும் வகையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த  திங்கட் கிழமை  137 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று  கொரோனா  தொற்று பாதிப்பு 325 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.5 சதவிகிதத்தில் இருந்து 2.39 சதவிகிதமாக ஒரே வாரத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து இருந்தாலும் உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

தேர்வு மையத்தை மாற்ற திட்டம்

இந்தநிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் நகரங்களில் கோவிட் வைரஸ் பாதிப்பு  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பாசிட்டிவிட்டி விகிதம் அதிகரித்து வருவதால், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகளில் மீண்டும் கோவிட் பாதிப்புகள் பதிவாகி வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெல்லியில் உள்ள என்சிஆர் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக  சிபிஎஸ்இ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான டேர்ம்  1 தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை அதிகப்படுத்தவும், வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு சிரமம் ஏற்பட்டாலும் மாணவர்களுக்கு தொற்று பரவுவது கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு ஏர்போர்ட் போனா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…படம், மேட்ச் எல்லாம் ஒரே இடத்தில்
ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்