
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கரத்தின் ஆதிக்கத்தின் மூலம் உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதியஜனதா வேண்டுமென்றே செய்த இந்த செயலால், மாநிலத்துக்கு பெரிய கேடு வரப்போகிறது.
ஆதித்யநாத் தீவித இந்துத்துவா ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்தது. அவரின் மதரீதியான பேச்சுக்களும், அதனால் அவருக்கு எதிராக பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சாதிய பிரிவினையுடன் பேசக்கூடியவர் ஆதித்யநாத். பிரதமர் மோடி வளர்ச்சிதான் முக்கிய குறிக்கோள் என அடிக்கடி கூறுகிறாரே, ஆதித்யநாத் தேர்வுதான் அந்த வளர்ச்சியா?.
இதுதான் நமக்கான அரசு?. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்றாக இணைந்து, மதரீதியான பிளவுகள் வராமல் பார்த்துக்கொண்டு, அனைத்து தரப்பு மக்களின் உரிமை பறிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.