
இந்துத்துவா தீவிர ஆதரவாளரும், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு உடையவரும், வன்முறை பேச்சுகளை கூசாமல் பேசுபவருமான மடாபதிபதி யோகி ஆதித்ய நாத் உ.பி முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
இவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதற்கு மதச்சார்பற்ற தலைவர்களும், அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரே அஞ்சுகிறார்கள்.
அவர் டுவிட்டரில் வௌியிட்டுள்ள செய்தியில், “ உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். புதிய அரசு உத்தரப்பிரதேச்சில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புகிறேன். ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
எங்களின் ஒரே நோக்கம் வளர்ச்சிதான். உத்தரப்பிரதேசம் வளரும்போது, இந்தியாவும் வளரும். உத்தப்பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வாய்ப்புகளையும் உருவாக்கி தருவோம்'' எனத் தெரிவித்தார்.