
உத்தரப்பிரதேச முதல்வராக பதவி ஏற்றுள்ள ஆதித்யநாத் ஆட்சியில் எங்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையும், இந்துக்களிடம் நாங்கள் அளித்த வாக்குறுதியான அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதை விரைவில் நிறைவேற்றுவோம் என்று விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதற்கு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு, வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
வி.எச்.பி. அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். இவரின் ஆட்சியில் மாநிலம், உத்தம பிரததேசமாக இருக்கும். ஆதித்யநாத் ஆட்சியின் மீதும், எங்களுக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது.
முழுநேரமும் ஓய்வின்றி உழைக்ககூடியவர் ஆதித்யநாத். இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் பாதுகாப்பாகவும், மேம்பட்டு இருப்பார்கள். இவருக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று நம்புகிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்ற இந்துக்களுக்கு அளித்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவோம்''எனத் தெரிவித்துள்ளார்.