மாதம் 84 ஆயிரம் சம்பளம் ரொம்ப கம்மி!பஞ்சாப் சட்டசபையில் எம்எல்ஏ பேச்சு!

By SG Balan  |  First Published Mar 23, 2023, 7:19 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சி எம்எல்ஏ சுக்விந்தர் குமார் சுகி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 84 ஆயிரம் ரூபாய் ஊதியம் போதாது என்று கூறிவருகிறார்.


சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) சட்டமன்ற உறுப்பினர் சுக்விந்தர் குமார் சுகி, எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உயர்த்த கோரிவருகிறார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு குழு அமைக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பஞ்சாப் சட்டப் பேரவை மசோதா 2023 மீதான விவாதத்தின்போது தலைமைக் கொறடாவின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது சுகி இந்தப் பிரச்சினையை எழுப்பினார். எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.84,000 சம்பளம், அவர்களின் ஓட்டுநர்கள் மற்றும் தனி உதவியாளர்களுக்கு ரூ.10,000 என வழங்கப்படும் மாதச் சம்பளம் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Tap to resize

Latest Videos

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு 1 ரூபாய்! நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கண்ணியமான சம்பளம் வழங்குவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களது ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் எனவும் அவர் வாதிட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் பகவந்த் மான், அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கொண்ட குழுவை அமைத்து பிரச்சினையை ஆராய வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

மேலும், பஞ்சாப் மாநில அட்டவணை சாதிகளுக்கான ஆணையம் (திருத்த) மசோதா, 2023, பஞ்சாப் விவசாய உற்பத்தி சந்தைகள் (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்களும் இத்துடன் பஞ்சாப் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

நாசாவின் ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த புதிய கிரகம்! தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகத் தகவல்

click me!