குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட போது ராகுல் என்ன செய்தார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

By Narendran SFirst Published Mar 23, 2023, 7:00 PM IST
Highlights

குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி நகரில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று அங்கு குஜராத்தி தாலியை உண்டு மகிழ்ந்தார். 

குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி நகரில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று அங்கு குஜராத்தி தாலியை உண்டு மகிழ்ந்தார். இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது. இதை அடுத்து ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை நீக்குவதற்கு சபாநாயருக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது?

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டபோது ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி நகரில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று அங்கு குஜராத்தி தாலியை உண்டு மகிழ்ந்தார்.

இதையும் படிங்க: 16.8 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை திருடி விற்ற கும்பல் கைது! ஹைதராபாத் போலீஸ் அதிரடி

கடந்த 3 தசாப்தங்களாக மாநிலத்தில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிய பிறகும், குஜராத் மற்றும் அதன் உணவு மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது அன்பு அப்படியே உள்ளது என்ற செய்தியை கட்சித் தொண்டர்களுக்கு தெரிவிக்க ராகுல் காந்தியின் வழி இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சசுமா உணவகத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியேறும் போது காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டும் இதே உணவகத்திற்கு ராகுல் காந்தி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!