ரோஹின்கியா முஸ்லிம்கள் அகதிகள் இல்லை; சட்டவிரோத குடியேறிகள்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ரோஹின்கியா முஸ்லிம்கள் அகதிகள் இல்லை; சட்டவிரோத குடியேறிகள்;  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

சுருக்கம்

Rohingya Muslims are not refugees Rajnath Singh

ரோஹின்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் அடைக்கலம் கேட்பதற்கு அவர்கள் அகதிகள் இல்லை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து குடியேறியவர்கள். அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ேநற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் நேற்று புதுடெல்லியில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போத அவர் பேசியதாவது-

நாட்டுக்குள் ரோஹின்கியா முஸ்லிம்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்பு அனுப்புவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மியான்மர் நாட்டு அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் போது ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்?

 ரோஹின்கியா முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேறிகள். அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைபாட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தின் மூலம்   தெளிவாகக் கூறிவிட்டோம். ரோஹின்கியா முஸ்லிம்கள் என்பவர்கள் அகதிகள் இல்லை. அகதிகள் அந்தஸ்து  பெறுவதற்கு கூட ஒரு வரைமுறை  இருக்கிறது. அதைகூட யாரும் இதுவரை பின்பற்றவில்லை.

இதுவரை அகதிகளாக நாட்டில் குடியேறுகிறோம் என்பது குறித்து எந்த ரோஹின்கியாமுஸ்லிம்களும் விண்ணப்பம் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் சட்டவிரோதகுடியேறிகள்தான்.

ஆனால், சிலர் மனிதநேய அடிப்படையில் ரோஹின்கியா முஸ்லிம்களை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். பிற நாடுகளில் இருந்து வரும் மக்களின் மனித நேயத்தை பற்றி பேசுவதற்கு முன் நம் நாட்டில் உள்ள மக்களின் மனிதநேயத்தை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்.

இறையான்மை உள்ள எந்த நாடும், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக எந்த முடிவையும், நடவடிக்கையும் சுதந்திரமாக எடுக்க உரிமை உண்டு. சட்டவிரோத குடியேறிகள் விஷயத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களும் அடங்கி இருக்கிறது.

இது தொடர்பாக மின்மர் நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியும், கடந்த இரு நாட்களுக்கு முன்ெவளியிட்ட அறிக்கையில், ரோஹின்கியா முஸ்லிம்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புகலிடம் தேடி வரும் அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லும் படி வற்புறுத்துவது சரியல்ல என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கூற விரும்புவதெல்லாம், ஆனால், அவ்வாறு கட்டாயமாக அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என்பது அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், இதுவரை ரோஹின்கியா முஸ்லிம்கள் அடைக்கலம் கேட்டு இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதனால்,தான் மனித உரிமைகள் என்ற பெயரில், சட்டவிரோத குடியேறிகளுக்கு அகதிகள் என்ற தகுதி அளிக்கும் தவறை நாம் செய்யக்கூடாது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!