கடந்த நான்கரை ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பதில் அரசியல் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுலின் மைத்துனர் ராபர்ட் வதேரா தெரிவித்திருக்கிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பதில் அரசியல் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுலின் மைத்துனர் ராபர்ட் வதேரா தெரிவித்திருக்கிறார்.
பிரியங்காவின் கணரும் சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டது என அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதேபோல லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்திலும் மோசடி நடந்திருப்பதாகக் கூறி ராபர்ட் வதேராவை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் வத்ராவின் தாயார் மவுரினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வத்ராவும் மவுரினும் ஆஜரானர்கள். 75 வயதான தன் தாயையும் விசாரணைக்கு அழைத்ததால், தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருந்தார் ராபர்ட் வதேரா.
இதுதொடர்பாக வதேரா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து: கடந்த 4 ஆண்டுகள் 8 மாதங்களாக எதுவும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பது அரசியல் மட்டுமே. இது பா.ஜ.க.வின் தேர்தல் வித்தை என மக்கள் நினைக்க மாட்டார்களா? இதில் என்னை மட்டுமல்லாமல், 75 வயதாகும் எனது தாயையும் விசாரணைக்காக அழைத்திருப்பது மிக மோசமான பழிவாங்கும் அரசியலை காட்டுகிறது.
மூத்த குடிமக்களை அலைக்கழிப்பது என்ன நியாயம்? மகளை இழந்த என்னுடைய தாயை என்னுடன் தங்கியிருக்குமாறு கூறினேன். அதற்காக அவர் விசாரணை என்ற பெயரில் கொடுமையை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என ராபர்ட் வதேரா கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்க ராபர்ட் வத்ரா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தொடர் விசாரணையால் அவர் சோர்ந்து போயிருப்பதாக அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.