ராணுவ வீரர்களை கொன்று குவித்த பாகிஸ்தானை சும்மா விடக்கூடாது... இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2019, 1:03 PM IST
Highlights

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகிய சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகிய சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜான் போல்ட் கூறுகையில், ’’எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அஜித் தோவலிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது’ என அவர் கூறியதாக தெரிவித்தார். 

click me!