வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆவணங்களை கேட்காமலேயே நிதி வழங்கிய எல்.ஐ.சி..!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2019, 12:29 PM IST
Highlights

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களது குடும்பத்தினருக்கு எல்.ஐ.சி நிறுவனம் எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் காப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது. 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களது குடும்பத்தினருக்கு எல்.ஐ.சி நிறுவனம் எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் காப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது.

ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோரச் சம்பவம் இந்திய மக்களின் இதயங்களை உலுக்கியது.

இந்நிலையில் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் மாண்டியா கிளை சார்பாக 3 லட்சத்து 82 ஆயிரத்து 199 ரூபாயை எந்தவித ஆவணங்களும் இன்றி இறப்புச் சான்றிதழைக் கூட கேட்காமல் மரணமடைந்த வீரர்களின் வாரிசுதாரர் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளது. மனிதநேய அடிப்படையில் இந்த தொகையை எல்.ஐ.சி நிறுவனம் வழங்கி உள்ளது.    

click me!