காஷ்மீர் தாக்குதலுக்கு யார் பொறுப்பு..? தீவிரவாதிகளா..? அரசின் மெத்தனபோக்கா..?

Published : Feb 16, 2019, 01:19 PM ISTUpdated : Feb 16, 2019, 04:05 PM IST
காஷ்மீர் தாக்குதலுக்கு யார் பொறுப்பு..? தீவிரவாதிகளா..? அரசின் மெத்தனபோக்கா..?

சுருக்கம்

தற்போது புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்களை இழந்திருப்பது துரதிஷ்டவசமானது. விரைவில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதிலும், பிரச்சாரம் செய்வதிலும், பாஜக அரசு காட்டும் ஈடுபாட்டை, உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையில் காட்டியிருந்தால் நம் ராணுவ வீரர்களின் உயிர் அநியாயமாக போயிருக்காது என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் ராணுவ விமான படைத்தளத்தில் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்திய போது 7 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பின்னர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

 

தற்போது புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்களை இழந்திருப்பது துரதிஷ்டவசமானது. விரைவில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதிலும், பிரச்சாரம் செய்வதிலும், பாஜக அரசு காட்டும் ஈடுபாட்டை, உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையில் காட்டியிருந்தால் நம் ராணுவ வீரர்களின் உயிர் அநியாயமாக போயிருக்காது என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தனது குடும்பங்களை விட்டுட்டு இரவு பகல் பாராமல் நாட்டிற்காக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் அலட்சியமாக மோடி அரசு நடந்திருப்பதை பலரும் கண்டித்து வருகிறார்கள். 

நம் ராணுவ வீரர்கள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வைத்து அரசியல் செய்தவர்கள், அந்த ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க தவறிவிட்டார்கள் என்று பொது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பதான்கோட்டில் நடத்திய தாக்குதலிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருந்தால் உரி, புல்வாமா தாக்குதலை நாம் தடுத்து இருக்கலாம் என கூறி வருகின்றனர். இனியாவது ராணுவ வீரர்கள் மீது மோடி அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல..! மோகன் பகவத் நெகிழ்ச்சி பேச்சு!
இலங்கைக்கு ஜாக்பாட்! டிட்வா புயல் நிவாரணமாக ரூ.3,700 கோடி நிதியுதவி.. இந்தியா அதிரடி அறிவிப்பு!