திரில்லான 104 கி.மீ. சுரங்க ரயில் பாதை... பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் 41 சதவீதம் நிறைவு!

By SG Balan  |  First Published Aug 5, 2023, 3:11 PM IST

125 கி.மீ. நீளும் இந்த ரயில்பாதையில் 105 கி.மீ. சுரங்கப்பாதையாக அமைய உள்ளது. கட்டுமானப் பணிகள் முடிய 30 ஆண்டுகள் ஆகுமாம்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இந்த நகரில் இருந்து கர்ணபிரயாக் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டம் மிக வேகமாக நடந்து வருகிறது.

125 கி.மீ. நீளும் இந்த ரயில்பாதையில் 104 கி.மீ. சுரங்கப்பாதையாக அமைய உள்ளது. இந்த ரயில்பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்தால், இதுதான் நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதையாக இருக்கும். டேராடூன், தெஹ்ரி கர்வால், பவுரி, ருத்ரப்ரியாக், சாமோலி என ஐந்து மாவட்டங்கள் வழியாக தேவ்பிரயாக், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக், கௌச்சர் கர்ன்பிரயாக் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக உருவாகி வருகிறது.

Latest Videos

undefined

நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் சந்திரயான்-3! இன்று இரவு 7 மணிக்கு முக்கிய நகர்வு!

ஆரம்பத்தில் ரூ.4,000 கோடியாக இருந்த இந்தத் இத்திட்டத்தின் மதிப்பு ரூ.16,200 கோடியாக உயர்ந்துள்ளது. மலைப்பகுதிகளில் ரயில் பாதை அமைக்க நிலங்களைக் கையகபடுத்துவது, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது போன்ற காரணங்களால் இந்த திட்டத்தின் மதிப்பீடு உயர்ந்த்தாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இப்போது இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் 41 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது. இந்தப் பாதையில் 3 ரயில் பாலங்கள், 3 தரைப் பாலங்கள், 25 சிறிய பாலங்கள் அமைகின்றன. இந்த ரயில் பாதை மூலம் ரிஷிகேஷ் - கர்ன்பிரயாக் இடையே பயண நேரம் 7 மணிநேரத்தில் இருந்து 4 மணிநேரமாகக் குறையும்.

ரிஷிகேஷ், டேராடூன், ஸ்ரீநகர், தெஹ்ரி, ஷிவ்புரி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமையும். டெஹ்ரி, பவுரி, ருத்ரபிரயாக் சமோலி மாவட்டங்களிலும் ரயில் நிலையங்கள் உருவாகும். சுரங்கப் பாதையில் செல்லும்போது ரயில்கள் 100 கிமீக்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

ஆனால், இந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய 30 ஆண்டுகபள் தேவைப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் பணியை இந்திய ரயில்வே துறை மிக வேகமாக செய்துவருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை நிலவும் சூழலில் இரு தரப்புக்கும் சண்டை வந்தால் ராணுவ வீரர்களையும், ராணுவ தளவாடங்களையும் விரைவாக அப்பகுதிக்கு அனுப்ப இந்த ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் சுரங்க ரயில்பாதை பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

அப்பம், அடை, அவியல், பணியாரம்... ஒரு பிடி பிடித்த பிரதமர் மோடி! தென்னிந்திய உணவு குறித்து புகழாரம்!

click me!