அப்பம், அடை, அவியல், பணியாரம்... ஒரு பிடி பிடித்த பிரதமர் மோடி! தென்னிந்திய உணவு குறித்து புகழாரம்!

Published : Aug 05, 2023, 12:21 PM ISTUpdated : Aug 05, 2023, 12:23 PM IST
அப்பம், அடை, அவியல், பணியாரம்... ஒரு பிடி பிடித்த பிரதமர் மோடி! தென்னிந்திய உணவு குறித்து புகழாரம்!

சுருக்கம்

பிரதமர் மோடி தென்னிந்திய உணவை ருசிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு கர்நாடகாவுக்குச் சென்ற பிரதமர், மைசூருவின் முன்னாள் அரச குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டார்.

தென் மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூற்றுகளை எதிர்கொள்ளவும், தேவைப்பட்டால் சமூக ஊடகங்களில் அரசின் திட்டங்களை எடுத்துக்கூற தொழில்முறை நிறுவனங்களை நியமிக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். கூட்டத்தை தொடர்ந்து எம்.பி.க்களுடன் மோடி இரவு உணவு சாப்பிட்டார். பணியாரம், அப்பம், காய்கறி கூட்டு, புளியோதரை, பருப்பு, அடை, அவியல் உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் சந்திரயான்-3! இன்று இரவு 7 மணிக்கு முக்கிய நகர்வு!

பிரதமர் மோடியும் என்டிஏ எம்.பி.க்களுடன் தென்னிந்திய உணவை ருசித்தது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று மாலை, தென்னிந்தியாவின் என்.டி.ஏ. எம்.பி.க்களுடன் நான் ஒரு அற்புதமான சந்திப்பை மேற்கொண்டேன். அதைத் தொடர்ந்து ஒரு சிறந்த இரவு விருந்தில் பணியாரம், அப்பம், காய்கறி கூட்டு, புளியோதரை, பருப்பு, அடை, அவியல் மற்றும் பல தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் என்றார். தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி தென்னிந்திய உணவை ருசிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு கர்நாடகாவுக்குச் சென்ற பிரதமர், மைசூருவின் முன்னாள் அரச குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டார். புகழ்பெற்ற 'மைசூர் பாக்' மற்றும் 'மைசூர் மசாலா தோசை' போன்ற உணவுகள் அப்போதைய மெனுவில் இருந்தன.

பிரதமரின் வருகை குறித்து பேசிய மைசூர் அரச குடும்பத் தலைவி பிரமோதா தேவி வாடியார், “யோகா தினத்திற்காக மைசூருவுக்கு வரும்போது காலை உணவுக்கு எங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தேன். இதற்காக அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்... நிச்சயமாக மைசூர் பாக்கும் மைசூர் மசாலா தோசையும் மெனுவின் இருக்கும்” என்றார்.

டாக்சியில் செல்லும்போது உண்மையை கொட்டிய பெண், ரூ.22 லட்சத்தை ஆட்டையை போட்ட டாக்சி டிரைவர்; உஷார் மக்களே!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே
பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!