10-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் மரணம்.. விளையாட்டு போட்டியின் போது நடந்த சோகம்..

Published : Aug 05, 2023, 02:05 PM ISTUpdated : Aug 05, 2023, 02:08 PM IST
10-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் மரணம்.. விளையாட்டு போட்டியின் போது நடந்த சோகம்..

சுருக்கம்

நேற்று முன் தினம் சிக்கத்தொட்லுகெரே அருகே நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பீமாசங்கர், நிகழ்ச்சியில் நடந்த தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

கர்நாடகாவில் விளையாட்டு போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு 15 வயது சிறுவn உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள சுராப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் பீமா சங்கர். இவர் துமாகூர் தாலுகாவில் உள்ள பெளதாரா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சிக்கத்தொட்லுகெரே அருகே நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பீமாசங்கர், நிகழ்ச்சியில் நடந்த தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஆனால் பரிசை வாங்குவதற்கு முன்பு பீமா சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவனையில் பீமா சங்கர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதை தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்த பின் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பீமா சங்கர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜு இதுகுறித்து பேசிய போது “ வியாழக்கிழமை நடந்த தொடர் ஓட்டப் போட்டியில் எங்கள் அணி 2-வது இடம் பிடித்தது. பீமா சங்கர் தான் அணியின் தலைவராக இருந்தார். எனினும் முதலிடம் பெறவில்லை என்று பீமாசங்கர் வருத்தத்தில் இருந்தார். விளையாட்டி போட்டிகள் முடிந்த பிறகு மாணவர்களை தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறும் படி கூறியுள்ளார். பீமா சங்கர் தனது பையை எடுக்கும் போது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். பீமாசங்கர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார். இதனிடையே பீமா சங்கரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் : என்கவுண்ட்டரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்.. தேடும் பணி தீவிரம்

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
Rahul Gandhi with Messi: மெஸ்ஸியுடன் கூலாக உரையாடிய ராகுல் காந்தி.. ரசிகர்கள் ஆரவாரம்..