
இந்திய ராணுவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இன்சாஸ் ரக துப்பாக்கிக்கு பதிலாக அதநவீனம் புகுத்தப்பட்ட ஹெக்லர் துப்பாக்கி அறிமுகம் செய்யப்படவுள்ளது......
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வெடித்த கார்கில் போரில் இந்திய வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்திய துப்பாக்கி இன்சாஸ்... 1988 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இத்துப்பாக்கி 1993 ஆம் ஆண்டு சிறு மாறுதலைக் கண்டு பின்னர் 1996 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் இச்சாப்பூர், மற்றும் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலும் இத்துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்சாஸின் சக்தி என்ன?
நீண்ட தூர இலக்குகளை கச்சிதமாக தாக்கும் வல்லமை இந்த இன்சாஸூக்கு இல்லை.... எல்லையில் நுழைந்த தீவிரவாதிகளை இத்துப்பாக்கியினால் முடமாக்க முடியும். தலையிலும் இதயப் பகுதியிலும் சுட்டால் மட்டுமே இறப்பு நிகழும்....
இன்சாஸுக்கு மாற்றாகிறது ஹெக்லர் அண்ட் கோச்
இன்சாஸூக்கு மாற்றாக விரைவில் ஹெக்லர் அண்ட் கோச் என்ற சக்திவாய்ந்த துப்பாக்கி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மரணத்தை எளிதில் சம்பவிக்கும் இத்துப்பாக்கியை வெளிநாட்டில் இருந்து வாங்குவதற்கான முறையான அறிவிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.