
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கம்பீரமாய் பறக்கும் புதிய மூவர்ண கொடி…
இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா- அட்டாரி பகுதியில் 360 அடி உயர கம்பத்தில் இந்திய தேசிய கொடி கம்பீரமாக பறக்கவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா - அட்டாரி என்ற இடத்தில் நாள்தோறும் மாலை இரு நாடுகளின் கொடியிறக்கம் நடைபெறும்.
இந்தியா – பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப்பகுதியான இந்த இடத்தில் நடைபெறும் இந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில், வாகா எல்லைப் பகுதியில் 360 அடி உயரத்தில் புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்தக் கொடி பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதலமைச்சர் அனில் ஜோஷி இந்த புதிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். பஞ்வாபில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அரசு விழாக்கள் ஏதும் நடைபெறக் கூடாது.
ஆனாலும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில்சுற்றுலாப் பயணிகள் பெருமையுடன் கலந்து கொண்டனர்.