செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் ஒரு மாதம் அவகாசம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

First Published Jun 21, 2017, 1:27 PM IST
Highlights
Reserve Bank Notification for More Months to Change invalid notes


செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச் 31 வரை பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

பின்னர், வங்கிகளால் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கவும் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில். 2016 டிசம்பர் 30-க்குள் டெபொசிட்டாக பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும், கூட்டுறவு வங்கிகளில் 2016 நவம்பர் 14-க்கு முன்  பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும்  மேலும் ஓரு மாத காலம் அவகாசமாக  வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இதற்குமுன் கொடுத்த அவகாசத்தின்போது ஏன் செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கவில்லை என்ற காரணத்தை அறிக்கையாக உடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

click me!