60 நாளில் எவ்வளவு பணம் தாங்க வந்தது...?? ரிசர்வ் வங்கி தகவல் இதோ..!!

First Published Jan 9, 2017, 5:19 PM IST
Highlights


மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் வங்கிகளில் இதுவரை ரூ. 14 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, மிக மிக சொற்பமாக ரூ. 75 ஆயிரம் கோடி மட்டுமே வராமல் இருந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பு

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகும் போது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 15 லட்சம் கோடியில் ஏறக்குறைய 20 சதவீதம் அதாவது ரூ. 3 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கிகளுக்கு வராமல் வெளியில் தங்கிவிடும். இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் கருப்புபணம், கள்ள நோட்டுகளாக இருக்கும் என்று அரசு கருதியது.

இந்நிலையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும் காலக்கெடு டிசம்பர் 30-ந்தேதியோடு முடிந்துவிட்டது. மக்கள் குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே பணத்தை கடும் கெடுபிடிகளுடன் மாற்றி வருகின்றனர்.

ரூ. 75 ஆயிரம் கோடி

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முக்கிய அதிகாரி ஒருவர் புதிய தகவல்களை அளித்துள்ளார். அவர் கூறுகையில், “  நாட்டில் புழக்கத்தில் இருந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ. 15 லட்சம் கோடியில், ரூ.14 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. இன்னும் ரூ. 75 ஆயிரம் கோடி மட்டுமே வரவில்லை. பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவிக்கும் போது வங்கிகளில்  ரூ. 50 ஆயிரம் கோடி இருப்பு இருந்ததது. அதைச் சேர்த்தால் ரூ. 15 லட்சம் கோடி வரும்.

ஆகவே, மத்திய அரசு எதிர்பார்த்தபடி ரூ. 3 லட்சம் கோடி வரை வங்கிக்கு டெபாசிட் செய்யப்படாமல் நின்றுவிடும் என்பது தவறானது. ரூ. 75 ஆயிரம் கோடி மட்டுமே வராமல் நின்றுள்ளது. இதுவரை புதிய ரூபாய் நோட்டுகள் ரூ. 10 லட்சம் கோடி வரை மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது'' என்றார்.

ஓர் ஆண்டாகும்

ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள ரூ. 15 லட்சம் கோடியில் எவ்வளவு போலியான நோட்டுகள் என்பதை கண்டுபிடிப்பதற்காக 60 பெரிய நவீன எந்திரங்கள் இருக்கின்றன. இந்த எந்திரம் மூலம் நாள்தோறும் 12 மணி நேரம்  ரூபாய்களை எண்ணினால் கூட, அனைத்து ரூபாய் நோட்டுகளையும் கணக்கீடு செய்து முடிக்க 600 நாட்கள் ஆகும் என்று ரிசர்வ் வங்கியின் மற்றொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

click me!