ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - குற்றச்சாட்டு பதிவு எப்போது?

First Published Jan 9, 2017, 3:38 PM IST
Highlights


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் 17ம் தேதி பிறப்பிக்‍கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் 2ஜி உரிமத்தை அதன் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் சன் குழும நிறுவனங்களில் 743 கோடி ரூபாயை முதலீடாக மொரிஷியஸ் நாட்டின் வழியே பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2014ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதேபோல், கடந்த ஆண்டு அமலாக்கப் பிரிவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை அடுத்து, தயாநிதிமாறன், கலாதிநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி திரு.ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மாறன் சகோரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் 17ம் தேதி பிறப்பிக்‍கப்படும் என நீதிபதி திரு.ஓ.பி.சைனி அறிவித்தார். 

click me!