குடியரசு தினம் எப்படி உருவானது? ஏன் ஜனவரி 26-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது?

By Ramya s  |  First Published Jan 24, 2024, 4:22 PM IST

இந்தியக் குடியரசு தினம் எப்படி உருவானது ? சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுக்களுக்கு பின் குடியரசு தினம் உருவாக காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடியரசு தினம் உற்சாகமாக  கொண்டாடப்படும். இந்த ஆண்டு இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26-ம் தேதி கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் குடியரசு என்றால் என்ன ?? ஏன் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?? இந்தியக் குடியரசு தினம் எப்படி உருவானது ? சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுக்களுக்கு பின் குடியரசு தினம் உருவாக காரணம் என்ன?? இந்தியா குடியரசு நாடாக உருவாக யார் யாரெல்லாம் முக்கிய பங்கு வகித்தார்கள்?? ஜனவரி 26-ம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது??.. இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு ஐரோப்பியர்களின் வருகை :

Latest Videos

undefined

1498-ஆம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். அவரது பயணத்தின் தொடர்ச்ச்சியாக இந்தியாவின் வளமையையும் செல்வ செழிப்பையும் கண்ட ஐரோப்பியர்கள்  வணிகம் செய்யும் நோக்கத்துடன் இந்தியாவில் குடியேறினர். அவர்களின் வருகையை தொடர்ந்து போர்ச்சுகீசியர்கள், இந்தியாவின் கடலோர பகுதிகளான கோவா, டையூ, டாமன், பாம்பே ஆகிய இடங்களில் வணிக முகாம்களை அமைத்தனர்.

 

குடியரசு தினம் 2024: ஜனவரி 26 குடியரசு நாள் அணிவகுப்பை எங்கே, எப்படி பார்க்க வேண்டும்? முழு விபரம் இதோ !!

மேலும் பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள்,டச்சுக்காரர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்தி வணிகம் மேற்கொண்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும் வணிகத்தை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கிழக்கிந்திய கம்பெனி நிரந்தர வணிகத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் :

நாளடவைல் பிரிட்டிஷ்காரர்கள் வரி செலுத்தமலேயே வணிகம் செய்ததால் அவர்களை வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத் என்பவர் எதிர்த்ததால் 1757-ல் பிளாசிப் போர் நடந்தது. அதில் நவாப் ஆங்கிலேயர்களிடம் தோற்றதால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போர்களின் மூலம் இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்தனர். வரிகள், நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியது.

எழுச்சி பெற்ற சுதந்திர போராட்டங்கள்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள்,கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டே விரட்டி எண்ணினர். ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’என்ற அமைப்பில் இணைந்த இந்திய மக்கள் ‘ஒத்துழையாமை இயக்கம்’ ‘சட்ட மறுப்பு இயக்கம்’ ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல்வேறு போராட்டங்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடத்தினர். இந்த போராட்டங்களின் விளைவாக, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்து சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியது.

சரி.. குடியரசு என்றால் என்ன?

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது மக்கள், தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடியாட்சி என அழைக்கப்படுகிறது. ‘மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு’ என குடியரசு என்ற வார்த்தைக்கு மிகச்சரியாக இலக்கணம் வகுத்து தந்தவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். அப்படிப்பட்ட மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

குடியரசு தினம் 2024: டிக்கெட் முன்பதிவு, இடம், அணிவகுப்பு செல்லும் பாதை - முழு தகவல் இதோ!

1927-ஆம் ஆண்டிலேயே குடியரசுக்கான அடித்தளம் :

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1927-ம் ஆண்டு பகத் சிங் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் ‘முழுமையான சுதந்திரம்’என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக் கருத்து ஜவர்ஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களை வெகுவாக கவர்ந்தது. 1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் 1929 டிசம்பர் 31-க்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்காவிட்டால் ஒத்துழையாமை இயக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியக் குடியரசு தினம் :

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் இந்தியாவுக்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டங்கள் எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய சட்ட திட்டங்களையே பின்பற்றப்பட்டது. இந்தியாவிற்கு என்று தனியாக அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்பதை உணர்ந்த இந்திய அரசு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழு அமைக்கப்பட்டு இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அடிப்படை கடமைகள், உரிமைகள்,அட்டவணைகள், திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட அரசியலமைப்பு சாசனம் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் நாள் நடைமுறைக்கு வந்தது.

ஏன் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடபப்டுகிறது?

1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளை இந்திய சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை 1947 வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. முதலில் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26-ஆம் தேதிக்கு கௌரவிக்கும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தை ஜனவரி 1950-ல் இயற்ற அரசியலமைப்பு வரைவுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டம்

அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ம் நாள் இந்தியக்குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைப்பார். குடியரசு தின விழா அணிவகுப்பு மற்றும் நாட்டிற்கு சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்பு படைகளின் அலங்கார அணிவகுப்புகளும் நடைபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அலங்கார ஊர்திகளும் நடைபெறும்.

டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றுவதை போல் மாநிலங்களில் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவதுடன் காவலர் அணிவகுப்பு, அரசுத்துறை அலங்கார ஊர்திகளையும், கலைநிகழ்ச்சியையும் பார்வையிடுவார்.. மேலும் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

click me!