மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று.. நாளை உருவாகும் ரெமல் புயல் எப்போது கரையை கடக்கும்?

By Ramya s  |  First Published May 25, 2024, 11:22 AM IST

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Tap to resize

Latest Videos

Courtallam : குற்றாலத்தில் அருவியில் குளிக்கலாமா.? மீண்டும் தடை போட்ட ஆட்சியர்.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

இந்த சூழலில் கடந்த புதன்கிழமை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி, பின்னர் இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ரெமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை புயலாக மாறும் எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் நாளை காலை புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாகவு, நாளை இரவு தீவிர புயலாகவும் மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. 

அதிகமாகும் வங்கக்கடல் மேற்பரப்பு வெப்பம்... நிறைய புயல்கள் உருவாக வாய்ப்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை..

இந்த புயல் நாளை நள்ளிரவில் தீவிர புயலாக சாகர் தீவு – கேபுபாரா இடையே வங்கதேசம் – மேற்குவங்கத்தை ஒட்டிய கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ரெமல் புயல் கரையை கடக்கும் போது கடல் அலைகள் சுமார் 3 முதல் 4 மீட்டர் அளவு மேலே எழக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசாவின் வட கடலோர மாவட்டங்களில் இன்று நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஹவுரா மற்றும் புர்பா மேதினிபூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 26 ஆம் தேதி மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்திலும், மே 27 ஆம் தேதி மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை வரை வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 4 மாவட்ட அதிகாரிகளை ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

click me!