தண்டனை நிறுத்தி வைப்பு.. மீண்டும் எம்.பி. ஆகிறார் ராகுல்காந்தி.. தேர்தலில் போட்டியிடவும் தடை இருக்காது..

By Ramya s  |  First Published Aug 4, 2023, 1:55 PM IST

ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி ” எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் உள்ளது என்று லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, டெல்லியில் தான் வசித்து வந்த, அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின.

இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் ராகுல் காந்திக்கு எதிராக சுமார் 10 கிரிமினல் அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சரியானது என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Latest Videos

இந்தியாவின் கட்டுமானத் துறை 2030-க்குள் 10 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கும்: புதிய தகவல்

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது சிறை தண்டனையை உடனடியாக நிறுத்துமாறு மனுவில் ராகுல்காந்தி வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும் ராகுல்காந்திக்கு எதற்காக அதிகபட்ச தண்டனை வழங்கியது என்றும், இது குறித்து கீழமை நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் ராகுல்காந்தி தனது பதவியை இழந்திருக்க மாட்டார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்ட நீதிபதிகள் தண்டனை காரணமாக ஒரு தனிநபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதால் ராக்குல்காந்தி 8 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நுழைய முடியாது. மேலும் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் ராகுல்காந்தி மீண்டும் தனது எம்.பி பதவியை தொடரலாம். ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல எந்த தடையும் இருக்காது. ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிடவும் தடை இருக்காது. தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றால், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ராகுல்காந்திப் பங்கேற்கலாம்.

உச்ச நீதிமன்றத்தை விபசாரத்துடன் ஒப்பிட்ட வீடியோ: ‘நோ ப்ராப்ளம்’ - தலைமை நீதிபதி!

click me!