Red Alert in Mumbai | தொடரும் கன மழை! மும்பைக்கு ரெட் அலெர்ட்! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

By Dinesh TG  |  First Published Jul 9, 2024, 9:25 AM IST

மும்பையில் தொடரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மத்திய ரயில்வே சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 


மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மற்றும் விமானங்களும் வேறு ஊர்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

மும்பைக்கு ரெட் அலெர்ட்

மும்பையில் கடந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 300 மிமீ மழை பெய்துள்ளது, சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்கிழமை அதிக கனமழை பெய்யும் என்று 'ரெட்' அலெர்ட் விடுத்துள்ளது.

IMD எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பை, தானே, நவி மும்பை, பன்வெல், புனே மற்றும் ரத்னகிரி-சிந்துதுர்க் கிராமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, ரத்னகிரி, ராய்காட், சதாரா, புனே மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் மற்றும் தானே மற்றும் பால்கர் ஆகிய இடங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.

Chennai Rain: காலை 10 மணிக்குள் இந்த 5 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!

தடைபட்ட போக்குவரத்து சேவை

வடாலா ஸ்டேஷனில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வடலா மற்றும் சிஎஸ்எம்டி இடையேயான சேவைகள் நிறுத்தப்பட்டன, அதே நேரத்தில் மன்குர்த் மற்றும் பன்வெல் இடையே ரயில்கள் மெல்ல மெல்ல இயக்கப்பட்டு வருகின்றன. மேற்கு ரயில்வேயில் தாதர்-மாதுங்கா சாலை மற்றும் மத்திய ரயில்வேயில் தாதர்-வித்யாவிஹார் இடையே உள்ள தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால், சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. .

சட்டப்பேரவை ஒத்திவைப்பு

கனமழை காரணமாக மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மந்த்ராலயாவில் கூட்டம் நடத்தி, BMC கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

தயாரிநிலையில் மீட்பு படை (NDFR)

குர்லா, காட்கோபர் மற்றும் மகாராஷ்டிராவில் தானே, வசாய், மஹத், சிப்லூன், கோலாப்பூர், சாங்லி, சதாரா மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் (NDRF) தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 டூ 2 மணி வரை மின்சாரம் இருக்காது.!

மழைப்பொழிவு

மும்பை நகரில் மட்டும் கடந்த பத்து மணி நேரத்தில் 47.93 மிமீ மழை பதிவாகியுள்ளது, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 18.82 மிமீ மற்றும் 31.74 மிமீ மழை பதிவாகியுள்ளது.

click me!