Mughal Garden: ராஷ்டிரபதி பவனின் முகல் கார்டன் இனி அம்ரித் உதயான்.. பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

Published : Jan 28, 2023, 07:36 PM IST
Mughal Garden: ராஷ்டிரபதி பவனின் முகல் கார்டன் இனி அம்ரித் உதயான்.. பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

சுருக்கம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றி உள்ளது மத்திய அரசு.

டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாய பாணியிலான கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட்ட முகலாய தோட்டம் அனைத்து இயற்கை ஆர்வலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இங்கு முகலாய தோட்டங்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செவ்வக தோட்டம், நீண்ட தோட்டம், வட்ட தோட்டம், மூலிகை தோட்டம், ஆன்மீக தோட்டம், இசை தோட்டம் என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தோட்டத்தை காட்டுமின்றி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த தோட்டம் முழுவதும் பல வகையான வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தையொட்டி அசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளில் கொண்டாடியது. நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் மகத்தான வரலாற்றை கொண்டாடுவதற்கும் இந்த கருப்பொருளை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தான் தற்போது டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டத்தின் பெயர் ‛அம்ரித் உதயான்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் முகாலயர்கள் பெயரில் இருக்கும் இடங்கள், முக்கியமான ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இருக்கும் முகலாய தோட்டம் இப்போது அம்ரித் உதயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜனவரி 29, அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால், அம்ரித் உதயன் திறந்து வைக்கப்படும், என்றும் ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு இந்த அம்ரித் உத்யன் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

PREV
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்