Rahul Gandhi Yatra:காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா:மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கருத்து என்ன?

By Pothy RajFirst Published Jan 28, 2023, 4:57 PM IST
Highlights

காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும்  பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார். 

காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும்  பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார். 

பாரத் ஜோடோ யாத்ரா வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி தனது சகோதரர் நடக்கும் நடைபயணத்தில் பிரியங்கா காந்தியும் இணைந்தார். ராகுல் காந்தி காஷ்மீர் பகுதிக்குள் நேற்று வந்தபின், திடீரென பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டன. 

பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை கேரளாவிலும் திரையிட மாணவர்கள் ஏற்பாடு

இதையடுத்து, ராகுல் காந்தியின் யாத்ரா திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று செய்திருந்தது.

ராகுல் காந்தியின் யாத்திரை அவந்திபோராவில் இன்று காலை தொடங்கியபோது, பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, அவரின் மகள் இல்திஜா முப்தி இருவரும் யாத்ராவில் இணைந்தனர். லெத்திபோரா பகுதியில் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டபோது, அங்கு பிரியங்கா காந்தியும் வந்து, ராகுல் காந்தியின் யாத்ராவில் இணைந்தார்.

லக்கிம்பூர் கெரி வன்முறை:மத்திய அமைச்சர் மகனுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

கடந்த 2019ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட லெத்திபோரா நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். இன்று இரவு பந்தாசவுக் பகுதியில் ராகுல் காந்தி யாத்திரை நிறுத்தப்படும். 

நாளை பந்தாசவுக் பகுதியில் இருந்து புறப்பட்டு நேரு பூங்காவில் முடியும். வரும் 30ம் தேதி ராகுல் காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து எஸ்கே அரங்கில் தனது யாத்திரையை முடித்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி

பாரத் ஜோடோ யாத்ரா குறித்து பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் ஜோடோ யாத்ரா காஷ்மீரில் புத்துணர்ச்சி மிக்க காற்றுபோல் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் காஷ்மீரில் ஏராளமான மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு யாத்ரா அனுமதிக்கிறது. ராகுல் காந்தியுடன் நடந்து சென்று மிகச்சிறந்த அனுபவம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பேசக்கூடிய தலைவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள்; சேனல்கள் உண்மையைப் பற்றி பேச விரும்பவில்லை, ஆனால் பாரத் ஜோடோ யாத்ரா காஷ்மீர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இதைப் பார்க்க உங்கள் பார்வைக்கு சவாலாக இருக்காது. இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், சாலைகளில் வரிசையாக நின்று ஒற்றுமைக்காக அணிவகுத்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ், சுகோய் விமானங்கள் விபத்து:விமானி உயிரிழப்பு

காஷ்மீர் மக்களை தேசவிரோதிகள், வகுப்புவாதிகள், சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று சித்தரிக்க வாய்ப்பை வீணடிக்காத அந்த காஷ்மீர் நிபுணர்களிடமிருந்து மிக வெளிப்படையான நிசப்தம் நிலவுகிறது. இந்த பிரச்சாரத்தின் முகத்தில் மக்களின் பங்கேற்புஇருக்கிறது”எ னத் தெரிவித்தார்

click me!