”ரேப் இன் இந்தியா” விவகாரம்... ஒட்டுமொத்த பாஜகவின் கூச்சலுக்கு இடையே தனி ஒருவனாக பதிலளித்த ராகுல்..!

By vinoth kumarFirst Published Dec 13, 2019, 3:58 PM IST
Highlights

நான் மன்னிப்பு கேட்க போவதில்லை. நான் என்ன கூறினேன் என்பதை தற்போது தெளிவுபடுத்துகிறேன். பிரதமர் மோடி எப்போதும் எங்கு பார்த்தாலும் மேக் இந்தியா பற்றி பேசி வருகிறார். ஒருவர் செய்தி தாளை படிக்கும்போது, மேக் இன் இந்தியா குறித்து செய்தியை பார்த்தது உண்டா?

”ரேப் இன் இந்தியா” எனக்கூறியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கூறியதற்கு அதுமுடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி எங்கு சென்றாலும் மேக் இன் இந்தியா குறித்து பேசி வரும் நிலையில், பாலியல் வன்முறைகள் அரங்கேறி, ரேப் இன் இந்தியாவாக தற்போது நாடு உள்ளதாகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இந்த கருத்துக்கு, ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மக்களவையில் பாஜக மற்றும் கூட்டணி எம்.​பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியால் ராகுல்காந்திக்கு பேசு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், "நான் மன்னிப்பு கேட்க போவதில்லை. நான் என்ன கூறினேன் என்பதை தற்போது தெளிவுபடுத்துகிறேன். பிரதமர் மோடி எப்போதும் எங்கு பார்த்தாலும் மேக் இந்தியா பற்றி பேசி வருகிறார். ஒருவர் செய்தி தாளை படிக்கும்போது, மேக் இன் இந்தியா குறித்து செய்தியை பார்த்தது உண்டா? ஆனால், செய்தி தாள்களில், என்ன மாதிரியான செய்திகள் வருகின்றன? நிறைய பாலியல் பலாத்கார தொடர்பாக செய்திகள் தான் வருகின்றன என்று தான் நான் பேசினேன் என ராகுல் கூறியுள்ளார். 

click me!