பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட ராம் ரஹீமுக்கு மீண்டும் 21 நாள் பரோல்!

By SG Balan  |  First Published Nov 20, 2023, 6:32 PM IST

ஹரியானாவின் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் பரோல் கிடைத்துள்ள 21 நாட்களில், உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்குவார் என்று கூறப்படுகிறது.


நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீண்டும் சிறையில் இருந்து வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை 21 நாட்களுக்கு பரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரியில் மூன்று வாரங்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் பரோல் கிடைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

பரோல் என்பது ஏதேனும் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஒரு கைதியை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ விடுவிக்கப்படுவதைக் குறிக்கும். ஃபர்லோ என்பது நல்ல நடத்தைக்கான வாக்குறுதியின் பேரில், குற்றவாளிகளை சிறையில் இருந்து குறுகிய கால தற்காலிகமாக விடுவிப்பதாகும்.

AI குரலைக் கேட்டு ஏமாந்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் அபேஸ்! இந்த மாதிரி கால் வந்தா உஷாரா இருங்க...

ஹரியானாவின் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் பரோல் கிடைத்துள்ள 21 நாட்களில், உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்குவார் என்று கூறப்படுகிறது.

ஜனவரியில் ராம் ரஹீமுக்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது. அப்போது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ராம் ரஹீம் சிங் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பரோல் பெறுவது அவரது உரிமை என்று கூறினார்.

அப்போது பரோலில் வந்த ராம் ரஹீமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாளால் கேக் வெட்டப்பட்டதும் சர்ச்சையானது நினைவூட்டத்தக்கது.

லேப்டாப்பில் எதுவும் ஸ்டோர் பண்ண முடியாது! விரைவில் வருகிறது ஜியோ கிளவுட் லேப்டாப்!

click me!