உள்விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி பலி.. தெலங்கானா அருகே சோகம்

By Raghupati R  |  First Published Nov 20, 2023, 4:24 PM IST

தெலங்கானா அருகே கட்டுமானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே இருக்கும் கனகமாமிடி கிராமத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமியின் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.  இன்றும் வழக்கம்போல் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு 14 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

அப்போது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையே 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட நிலையில் அவர்களில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Three people have died & sustained injuries when the roof slab of an indoor stadium which is under construction at Kanakamadi in Moinabad, Telangana collapsed, reports pic.twitter.com/f2ea1A2oi5

— Uma Sudhir (@umasudhir)

விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உள்விளையாட்டு அரங்கம் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!